• Sep 21 2024

திரைப்படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்ட செல்வராகன்-அடடே இது தான் காரணமா ?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் செல்வராகவன். இவரின் தம்பி தான் பிரபல நடிகர் தனுஷ். 2003 ஆம் ஆண்டு வெளியாகிய காதல் கொண்டேன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

தனித்துவமான இயக்குநராக விளங்கும் செல்வராகவன் நடிகை சோனியா அகர்வாலை முதலில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் குறுகிய காலத்திலேயே விவாகரத்து செய்து கொண்டனர். பின்பு 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை செல்வராகவன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவ்வாறு குடும்பம் குழந்தைகள் என்று சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த செல்வராகவன். சமீபத்தில் வெளியாகிய சாணிக்காகிதம் என்ற படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து செல்வராகவன் தன்னுடைய தம்பி நடிக்கும் நானே வருவேன் என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பொதுவாக தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் நடிகர்களாக மாறுவது புதிதல்ல.

இதற்கு பிறகு படங்களை இயக்குவாரா மாட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு உள்ளது. இந்த நிலையில் நானே வருவேன் திரைப்படத்தை நடித்து முடித்த பிறகு, செல்வராகவன் முழுநேர நடிகராக மாறி விட அவருடைய மனைவி கண்டிப்பாக சொல்லி இருக்கிறார். இனி படங்களை இயக்க வேண்டாம் என்று அவரின் தம்பி செல்வராகவனின் கூறியுள்ளார். இனி வருகின்ற நாட்களில் படங்களில் கமிட்டாக ஆர்வத்துடன் இருக்கும் செல்வராகன் தன்னுடைய மனைவியோடு நிறைய கதைகளை கேட்க தயாராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement