விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு தொடராக ஒளிபரப்பாகி வருகிறது தமிழும் சரஸ்வதியும் சீரியல்.தீபக் மற்றும் நக்ஷத்ரா முக்கிய ஜோடிகளாக நடிக்க தொடர் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அர்ஜுனால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்து தமிழ் எப்படி தனது வாழ்க்கையில், தாயிடம் விட்ட சவாலில் ஜெயிக்கப்போகிறார் என்பதே இப்போது முக்கிய கதையாக இருக்கிறது.முக்கிய வில்லியாக இருந்த சந்திரகலா இப்போது நல்லவராக மாறியிருப்பதால் தொடர் முடியப்போகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துவிட்டது.
சமீபத்தில் தான் வசுந்தரா வேடத்தில் நடித்துவந்த தர்ஷனா தொடரை விட்டு விலகியதாக கூறப்பட்டது, ரசிகர்களும் வருத்தப்பட்டார்கள். அதன்படி தர்ஷனா வெளியேறியதைத் தொடர்ந்து தற்பொழுது சங்கீதா வசுந்தா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். மேலும் தர்ஷனா ஏன் இதிலிருந்து விலகினார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது.
அதன்படி தர்ஷனா புதிய சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் காரணத்தினால் தான் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் தர்ஷனாவுக்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!