தமிழ் திரையுலகில் ‘தளபதி’ என்ற அடையாளத்துடன் வலம் வரும் முன்னணி நடிகர் தான் நடிகர் விஜய்.
இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல இயக்குனராக விஜய்யின் பல திரைப்படங்களை தொடக்க காலத்தில் இயக்கியவர். விஜய்யை வைத்து படம் இயக்கும் முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் சில படங்களை இயக்கியுள்ளார்.
தமிழ் அல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.அத்தோடு இவரது மனைவி ஷோபா சந்திரசேகர், பின்னணி பாடகியாக, நடிகர் விஜய்யுடன் இணைந்து பாடிய பாடல்கள் உட்பட பல பாடல்களை பாடியுள்ளார். தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்.
கடைசியாக 'மாநாடு' படத்தில் சிம்புவுடன் 'அறிவழகன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் 'நான் கடவுள் இல்லை' என்ற படத்தை சந்திர சேகர் இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறுஇருக்கையில் , ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று எஸ்.ஏ. சந்திரசேகர் சாமி தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட எஸ்.ஏ. சந்திரசேகர் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.எனினும் குறிப்பாக, "உங்கள் மகனுக்கு தொடர்ந்து வெற்றி படங்களாக அமைந்திட்டு இருக்கு. அது பற்றி உங்கள் கருத்து என்ன?" என்ற கேள்விக்கு"அதுதான் கடவுள் உடைய கிருபை. என் தாய் தந்தையோட பிரார்த்தனை. எங்களோட பிரார்த்தனை. அவருடைய உழைப்பு. அவருடைய ஈடுபாடு. எல்லாத்துக்கும் அதானே.
எந்த அளவுக்கு உழைக்கிறோமோ அந்த அளவுக்கு கடவுள் நம்மை உயர்த்திக் கொண்டே போவார். எனினும் அதே நேரத்தில் கடவுளின் அனுக்கிரகமும் வேண்டும்." என சந்திரசேகர் பதில் அளித்தார்.பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' படம் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கி இருந்தார்.
வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
Listen News!