• Nov 10 2024

நடிகை ப்ரியாமணியின் உடல்எடை அதிகரிக்காமல் இருப்பதற்கான ரகசியம் இது தானா?- வீட்டிலையே வைச்சிருக்கிறாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை ப்ரியாமணி . தொடர்ந்து இவர் சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பருத்தி வீரன் திரைப்படம் தான். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதினையும் பெற்றார்.

தொடர்ந்து மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போதே 2017ம் ஆண்டு முஸ்தப்பா ராஜ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் சில காலம் சரியான படவாய்ப்புகள் அமையாமல் தவித்து வந்தார்.


அந்த வகையில் அண்மையில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார்.மேலும் வெப் சீரியல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். இவர் ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் குடிப்பாராம், இதனால் அவர் புத்துணர்ச்சியாக இருக்க உதவுமாம். வீட்டிலேயே ஜிம் வைத்திருக்கும் ப்ரியாமணி கார்டொயோ வொர்க்கவுட் அதிகம் செய்வாராம்.


தினமும் யோகா மற்றும் வாக்கிங் தவறாமல் செய்வாராம். வாரம் ஒருமுறை முகம் முதல் கால் வரை தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்து ஸ்பா குளியல் போடுவாராம்.இது தான் இவருடைய ஸ்கின் கெயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement