• Sep 20 2024

56வயதிலும் இளமையாக இருக்கும் நதியா... அழகின் ரகசியம் இதுதானா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் நதியா. தமிழ் மலையாளம், தெலுங்கு என பன்மொழி பிரபலமாக வலம் வந்தவர். தமிழில் 'பூவே பூச்சூடவா' எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.


இதனைத் தொடர்ந்து  மந்திரப்புன்னகை, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், நிலவே மலரே, பூமழை பொழிகிறது, சின்னத்தம்பி பெரியதம்பி, பாடு நிலவே, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா,  ராஜகுமாரன், சின்ன மேடம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.


சினிமா நடிகைகளை பொறுத்தவரையில் வயது ஏற ஏற அவர்களின் அழகு குறைந்து விடும். ஆனால் நதியாவோ 56 வயத்தினைக் கடந்தும் இன்றுவரை அதே அழகுடன் ஜொலித்து வருகின்றார். இவர் இன்றுவரை இவ்வளவு அழகாக இருப்பதற்கான காரணம் என்ன..? அதற்காக அவர் என்ன செய்கிறார்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.


அதாவது நதியா நன்றாக தண்ணீர் குடித்து வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து வருகின்றார். பொதுவாகவே உடற்பயிற்சி தான் பெரும்பான்மையான நடிகைகளின் பிட்னஸ் சீக்ரெட். எனவே நதியாவின் இளமைக்கு காரணம் அவர் செய்து வருகின்ற தீவிர உடற்பயிற்சி தான் எனக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement