ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி புயலாக இடம்பிடித்த யாஷிகா ஆனந் தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து யாஷிகாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலத்தில் காரை ஓட்டி வந்தது யாஷிகா தான் என்பது உறுதி செய்யப்பட்டது. யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் அவருடைய வாக்குமூலத்தில் தெரியவந்தது.
தொடர்ந்து படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் மார்ச் 21-ஆம் தேதி செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலையில் இவர் ஆஜராகாததால் 25-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒருவேளை யாஷிகா மட்டும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் காவல்துறையினர் அவரை கைது செய்வதற்கும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. அதன்பின்னர் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த யாஷிகா இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.
இதனை அடுத்து இன்று செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ரீகால் மனு அளித்திருந்த யாஷிகா ஆனந்த், நேரில் ஆஜராகி அந்த அலுவலகத்திற்கு முன்பு பல மணி நேரமாக காத்துக் கிடந்தார்.அத்தோடு பிடி வாரண்டில் இருந்து தப்பிப்பதற்காகவே யாஷிகா ஆனந்த் தரப்பிலிருந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது கடந்த இரண்டு வருடங்களாக வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிம்கி கொடுத்த யாஷிகாவிற்கு பிடி வாரண்ட் உத்தரவிட்டு தற்போது ஆஜர்ப்படுத்தி இருப்பது சோசியல் மீடியாவில் பெரும் விஷயமாக பேசப்பட்டு வருகின்து.
Listen News!