• Nov 19 2024

அடடே.. இவர் தான் நடிகை அம்பிகாவின் மகனா .? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் 80கால கட்டத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகை அம்பிகா. அப்போதைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனுமே கிட்டத்தட்ட ஜோடி போட்டு நடித்தவர்.

இவ்வாறு இருக்கையில் தமிழ் சினிமாவில் தனக்கென்ற ஒரு இடத்தையும் பிடித்தார்.அத்தோடு படங்களில் நடிக்காவிட்டாலும் சின்னத்திரைகளில் முக்கிய ரோலில் வந்து ரசிகர்களை ரசிக்கவைத்துக்கொண்டு இருக்கிறார்.

கேரளவியில் பிறந்த இவர் தனது 14 வயதில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார்.

இதன் பின்னர் 1979 ஆம் ஆண்டு ‘சக்காளத்தி ‘ என்னும் தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இவரது தங்கை ராதாவும் ஒரு நடிகை என்பது தெரியும். ஆனால் அம்பிகா அவரை விட கொஞ்சம் சீனியர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார் நடிகை அம்பிகா. இவருக்கு 1988 ஆம் ஆண்டு வெளிநாட்டு வாழ் இந்தியரான ஷினு ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அத்தோடு ராம் கேஷவ், ரிஷி கேஷவ் என்று இரண்டு மகன்களும் இருக்கின்றனர். தற்போது ராம் கேஷவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது .

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement