• Nov 19 2024

சின்ன குழந்தையா பார்த்த நடிகர் ஜெயம் ரவியின் மகனா இது.. இப்படி வளந்திட்டாரே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக வலம்வரும் நடிகர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர். இவருடைய முதல் படமே இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.

தொடர்ந்து என் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் நடித்தார். இவ்வாறு சினிமாவில் காதல் திரைப்படங்களிலும், ஆக்சன் திரைப்படங்களிலும், காமெடி திரைப்படங்களிலும் நடித்து வந்த நடிகர் ஜெயம் ரவி. 2009- ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுடைய திருமணம் வெகு விமர்சையாக இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்று முடிந்தது.

இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.அவரின் மகன் ஆரவ் கூட டிக் டிக் டிக் என்ற படம் மூலம் நடிப்பை தொடங்கியுள்ளார். அடுத்து என்ன படம் நடிக்கப் போகிறார். அடுத்தடுத்து நடிப்பாரா என்பது தெரியவில்லை?

இந்த நேரத்தில் தான் ஆரவ்,பிஃக் பாஸ் புகழ் ராஜு ஜெயமோகனுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் அட ஜெயம்ரவி மகனாக நன்றாக வளர்ந்து விட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement