“ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் “லால் சலாம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்க, ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார்.
“லால் சலாம்” திரைப்படம் ஹிந்தியில் வெளிவந்த “கைபோச்சே” திரைப்படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை. “கைப்போச்சே” திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இதில் மூன்று நண்பர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களாக அமைந்திருப்பார்கள். அதே போல் “லால் சலாம்” திரைப்படமும் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படமாகும்.
ஹிந்தியில் “கைப்போச்சே” திரைப்படத்தில் மதக் கலவரங்கள் நடப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இன்று வெளிவந்த “லால் சலாம்” திரைப்படத்தின் ரஜினி இடம்பெற்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கலவரத்தின் பின்னணியில்தான் ரஜினிகாந்த் நடந்து வருவது போல் அமைந்திருக்கும். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, “லால் சலாம்” திரைப்படத்தின் கதையை குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது தமிழகத்தின் பின் தங்கிய பகுதியில் இருந்து இரண்டு கிரிக்கெட் பிளேயர்கள் இந்திய அணிக்குள் நுழைகிறார்கள். அவர்கள் பாம்பேயில் கிரிக்கெட் விளையாடச் செல்லும்போது ஒரு சம்பவம் ஏற்படுகிறது. அங்கே ரஜினிகாந்தின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் ஒன் லைன் என்று அப்பேட்டியில் செய்யாறு பாலு பகிர்ந்துகொண்டுள்ளார்.
Listen News!