இயக்குநர் ராஜமெளலியின் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் தான் ஆர் ஆர் ஆர். இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.வரலாற்றுப் படமான இப்படம் வசூலிலும் அள்ளிக் குவித்தது.
ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் அளவுக்கு ஏகப்பட்ட உழைப்புகளை கொட்டி இந்த படத்தை இயக்கி இருக்கிறார் ராஜமெளலி. இந்த ஆண்டு இந்த படத்தை இந்திய அரசு சார்பில் ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் என்றும், ஆஸ்கர் கொடுக்க வேண்டும் என்றும் ஹாலிவுட் ரசிகர்களே வியந்து பாராட்டி வருகின்றனர்.
மேலும், மார்வெல் படங்களில் கூட ஜூனியர் என்டிஆர் மிருகங்களுடன் குதிக்கும் அந்த இடைவேளை காட்சி போல ஒரு காட்சி இல்லை என்று உலகம் முழுவதும் ராம்சரணையும் ஜூனியர் என்டிஆரையும் பாராட்டி வரும் நிலையில், டோலிவுட் ரசிகர்கள் ராம்சரண் தான் பெஸ்ட் என்றும் ஜூனியர் என்டிஆர் இல்லை என்றால் படமே வேஸ்ட் என்றும் சண்டை போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை இதுதான் என முதல் பாகத்தில் எனக்கு ராம் வேண்டும் என ஆலியா பட் கேட்க, ராமை பீம் மீட்டுக் கொண்டு வந்தார் என்றும், இரண்டாம் பாகத்தில் பீமின் ஜோடியும் தனக்கு ராம் வேண்டுமென கேட்க ஜோக்கராக பீம் மாறுவது தான் கதை என ராம்சரண் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அண்ணா என ஜூனியர் என்டிஆர் பேசும் வசனங்களை மீம் டெம்பிளேட்டாக மாற்றி ஏகப்பட்ட ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், நெட்பிளிக்ஸ், ஜீ5 ஓடிடி தளங்களை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது என்கிற அறிவிப்பையும் அதே டிரெண்டிங் டெம்பிளேட்டை போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- அவர் மட்டும் இல்லை என்றால், நான் ஜீரோவாகத்தான் இருந்திருப்பேன்- மறைந்த அப்பாவுக்கு கடிதம் எழுதிய சுதா கொங்கரா
- பாலிவுட் நடிகர்கள் செய்யும் பைத்தியக்காரத்தனங்களை நாமும் செய்ய வேண்டுமா?- விஷ்ணு விஷாலை சீண்டும் நெட்டிசன்கள்
- சசிகுமாரின் காமன் மேன் திரைப்படத்தின் டைட்டிலை மாற்றிய படக்குழு- தலைப்பைக் கேட்டாலே குலை நடுங்குது
- அடுத்த முதலமைச்சர் அண்ணாச்சியா? பற்ற வைத்த நடிகை ஊர்வசி- கழுவி ஊற்றத் தொடங்கிய ப்ளூ சட்டை மாறன்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!