• Sep 20 2024

விக்ரம் படத்தின் தமிழ் நாட்டு வசூல் இவ்வளவா?… ஓப்பனாக அறிவித்த உதயநிதி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அத்தோடு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் கடந்த 3 ஆம் திகதி வெளியாகி பெரியளவில் ஹிட்டாகி வருகின்றது. இதுவரை 250 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. எனினும் இது தொடர்பான அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

தமிழ்நாடு மட்டுமன்றி கர்நாடகா,ஆந்திரா, மற்றும் கேரளாவிலும் விக்ரம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் நேற்று விக்ரம் படத்தின் வெற்றி விழா இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட விக்ரம் படத்தின் தமிழக விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது "எல்லோரும் படத்தின் வசூல் பட்டி அறிவித்து வருகின்றார்கள். தமிழ்நாட்டு விநியோகஸ்தராக நான் இப்போது அறிவிக்கின்றேன், தமிழ்நாட்டில் மட்டும் எங்கள் ஷேராகவே 75 கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. இதுவரை எந்தத் தமிழ் படமும் செய்யாத வசூலினை இப்படம் செய்துள்ளது. இன்னும் 3 வாரங்களுக்கு திரையரங்குகளில் ஓடும். இப்போதும் வார இறுதி நாட்களில் டிக்கெட் கிடைக்காமல் பலர் எனக்கு போன் செய்கின்றார்கள்" என்று கூறியுள்ளார்.

விநியோகஸ்தர் பங்காகவே 75 கோடி ரூபாய் வசூல் என்றால் ஒட்டு மொத்தமாக திரையரங்கம் மூலமான வசூல் 130 கோடி ரூபாயை தாண்டி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விக்ரம் படம் இன்றும் வெற்றிநடை போட்ட வண்ணமே இருக்கின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement