• Sep 20 2024

அட வரலக்ஷ்மியின் தங்கை இவர் தானா..? தந்தை, தாய், சகோதரியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். இவர் 'போடா போடி' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர். அறிமுகப் படத்திலேயே தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தமையால் 'தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சர்கார், சண்டை கோழி' எனப் பல படங்களில் முன்னணி நட்சத்திரங்கள் பலருடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.


சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வந்த இவர் தற்போது வில்லியாகவும் பல படங்களில் நடித்து வருகின்றார். அதுமட்டுமன்றி வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் கை தேர்ந்த ஒருவராக விளங்கி வருகின்றார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இதனால் இவருக்கும் ஏராளமான ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கின்றது. 


மேலும் வரலக்ஷ்மி நடிகரும், பத்திரிகையாளரும் சிறந்த அரசியல்வாதியுமான நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாவின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே. இதன்பின் சரத்குமார்-சாயா இருவருக்கும் பூஜா எனும் மகள் பிறந்துள்ளார். 



வரலக்ஷ்மி சரத்குமாரின் புகைப்படங்கள் அதிகளவில் இணையத்தில் வெளியாவது உண்டு. ஆனால் இவரின் தங்கை பூஜாவின் புகைப்படங்கள் பெரிதாக வெளிவருவதில்லை. இந்த நிலையில் வரலக்ஷ்மி சரத்குமார் தனது தாய் சாயா மற்றும் தனது தங்கை பூஜா சரத்குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement