• Sep 20 2024

லியோ படத்தில் விஜய்யின் பெயர் இது தானா?- நா ரெடி தான் பாடல் மூலம் கிடைத்த அப்டேட்- செம குஷியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த ஓராண்டாக தொலைக்காட்சி, ரேடியோ, சமூகவலைத்தளம் என எந்த பக்கம் திரும்பினாலும்,அதிகம் பேசப்படும் டாபிக்காக லியோ படம் உள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணி என்று தான் சொல்ல வேண்டும். லியோ படம் வெளியாகும் முன்பே தயாரிப்பாளருக்கு பலகோடி லாபத்தை ஈட்டியள்ளது.

 இப்படம் வெளியான பிறகு ஆயிரம் கோடி வசூலை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நேற்று விஜய்யின் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில்,இப்படத்திலிருந்து அனிரூத் இசையில் நா ரெடி பாடல் வெளியாகியுள்ளது. விஷ்ணு எடவன் எழுதியுள்ள இந்தப் பாடலை விஜய்யுடன் இணைந்து அனிரூத் மற்றும் அசல் கோளாறு பாடியுள்ளனர்.


இந்நிலையில், தற்போது 10 மில்லியன்களை கடந்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது.இப்பாடலில் விஜய்யின் நடனம், அச்சு பிசகாமல் அவருடன் 2000 பேர் ஆடுவது, பாடலுக்கு போட்டிருக்கும் செட் பல விஷயங்களை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில், இந்த பாடலில் வரும் ஒரு காட்சியை உற்றுப் பார்த்த ரசிகர்கள்  லியோ படத்தின் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் இதுவாகத்தான் இருக்கும் என்று தகவலை பரப்பி வருகின்றனர். அதாவது அந்த பாடலின் ஒரு சீனில் விஜய் நடந்து வரும்போது, அவரது பின்புறமாக ஒரு நிறுவனத்தின் பெயர் பலகை உள்ளது. 


அதில் தாஸ் & கோ என பெயர் எழுதப்பட்டுள்ளது. அந்த சாம்ராஜ்ஜியத்திற்கே விஜய் தான் தலைமை என சொல்லப்படும் நிலையில், அவரது நிறுவனத்திற்கும் விஜய்யின் பெயர் தான் சூட்டப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், லியோ படத்தில் விஜய் லியோ மற்றும் தாஸ் என்பது இரண்டு கேரக்டரின் பெயராக இருக்கலாம் என தகவலை பரப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement