• Nov 17 2024

ஶ்ரீப்ரியாவின் மகளுக்கு இதுதான் ஆசையா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 தமிழ் திரையுலகில்  80, 90 களில் தன் சிறந்த நடிப்பால் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர்தான் ஸ்ரீ பிரியா. இவர் ரஜினி, கமல் போன்ற முன்னணி  நடிகர்களுடன் 60 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

பின்பு இவருக்கும் மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவருக்கும் 1988ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு நாகார்ஜுன் என்ற மகனும், சினேகா என்கிற மகளும் உள்ளனர். இதில் சினேகா லண்டனில் வழக்கறிஞராக பட்டம் பெற்று லண்டனில் பணியாற்றி வருகின்றார்.

ஸ்ரீ பிரியா, தான் இயக்கிய “மாலினி 22 பாளையங்கோட்டை திரைப்படத்தின் பிரஸ் மீட் அன்றுதான் மகள் சினேகாவை அழைத்துவந்தார்.

அப்போது தன் மகளுக்கு நடிக்க விருப்பம் இல்லை என்றும், அவர் வழக்கறிஞராக வேண்டும் என்பது தான் அவரது ஆசை என்றும் அவர் கூறினார்.

அவர் மகளுடன் இருக்கும் புகைப்படம்  தற்போது நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது. 



Advertisement

Advertisement