• Nov 17 2024

நயன்தாராவின் திருமண சேலையில் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த விடயம் இது தானா?- இது என்ன புது டுவிஸ்டாக இருக்கு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தனது காதலனான இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 9ம் திகதி கரம் பிடித்தார். இவர்களின் திருமணமானது இந்து பாரம்பரிய முறைப்படி மிகப் பிரமாண்டமாக மகாபலிபுரத்தில் நடைபெற்றது.

இவர்களின் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருமணம் முடிந்த அடுத்த நாள் இருவரும் திருப்பதி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ததோடு சர்ச்சையிலும் சிக்கினார்கள். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

மேலும் திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த ஆபரணங்கள் மற்றும் திருமணத்தில் வழங்கப்பட்ட உணவுகள் பரிசுகள் குறித்த விபரங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த புடவை குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அந்த புடவையில் அவரது பெயரும், விக்னேஷ் சிவன் பெயரும் ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளதாம். திருமண தேதியோடு அந்த புடவை வடிவமைக்கப்பட்டுள்ளதாம் . அதில் சில அம்மன் சிலைகளின் உருவமும் உள்ளதாம் என்றும் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement