• Nov 19 2024

ரஜினிகாந்த் இதனால்தான் இஸ்லாமியராக நடிக்கிறாரா?.. பத்திரிகையாளர் உடைத்த உண்மை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். எனினும் அதுகுறித்த காரணத்தை பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இப் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அத்தோடு தர்பார், அண்ணாத்த படங்கள் தோல்வியடைந்ததால் ஜெயிலர் மூலம் வெற்றியை அறுவடை செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார். அத்தோடு அவரது நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக சமீபத்தில் வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோவுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது.

எனினும் இதற்கிடையே தனது மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் ரஜினிகாந்த். இதில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விளையாட்டை மையப்படுத்தி லால் சலாம் உருவாகியிருப்பதாக  கூறப்படுகின்றது.இப்  படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிவடைந்திருக்கும் சூழலில் இரண்டாம் ஷெட்யூலுக்காக படக்குழு மும்பை சென்றிருக்கிறது. இந்த ஷெட்யூலில் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படவிருக்கின்றன.

அத்தோடு லால் சலாமில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எனினும்  அதுகுறித்த போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி கடும் விமர்சனத்தை சந்தித்தது. அத்தோடு இந்த லுக் சுத்தமாக நன்றாக இல்லை. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம் என ரசிகர்கள் சொல்கின்றனர். எனினும் அதேசமயம் இஸ்லாமிய வெறுப்பு படங்கள் வருவது அதிகரித்திருக்கும் சூழலில் உச்ச நடிகர் ரஜினிகாந்த் இஸ்லாமியர் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பது பெரும்பாலானோரிடத்தில் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

 அதேபோல், ரஜினி அடுத்ததாக த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். அத்தோடு அதிலும் அவர் இஸ்லாமியர் கதாபாத்திரத்தை ஏற்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ரஜினிகாந்த் எதற்காக இஸ்லாமியர் கதாபாத்திரத்தை ஏற்கிறார் என்பது குறித்து பத்திரிகையாளர் அந்தணன் கூறுகையில், "தி கேரளா ஸ்டோரி தமிழ்நாட்டில் திரையிடப்படவில்லை. இருந்தாலும் இந்தப் படம் 30 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.

இஸ்லாமிய வெறுப்பை பரப்ப வேண்டும் என படங்கள் வரும் சூழலில் ரஜினிகாந்த் இஸ்லாமியர் கதாபாத்திரம் ஏற்றிருப்பது பாஸிட்டிவான விஷயம். பலருக்கும் இஸ்லாமிய வெறுப்பு கருத்து இருக்கிறது. ஆனால் எனக்கு வேறு ஒரு கருத்து இருப்பதாக ரஜினிகாந்த் துணிச்சலோடு இறங்கியிருக்கிறார். எப்படியும் படத்தில் ரஜினியை நல்லவராகத்தான் காட்சிப்படுத்துவார்கள். இது ஒரு நல்ல விஷயம்" என்றார்.

அதிகரிக்கும் இஸ்லாமிய வெறுப்பு படங்கள்: முன்னதாக, தி காஷ்மீர் ஃபைல்ஸ் இஸ்லாமிய வெறுப்பை கொண்டு வெளியானது. அதேபோல் இப்போது தி கேரளா ஸ்டோரி வெளியாகியிருக்கிறது. அந்தப் படம் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இருப்பினும் இதுபோன்ற படம் ஒரு மாநிலத்தில் திரையிடப்பட்டாலே அது ரசிகர்களிடம் மோசமான எண்ணத்தையே விதைக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement