• Sep 20 2024

யோகி பாபுவின் மகனா இது…பிரபல நடிகையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பல பிரபலங்கள் தற்போது தங்களது வெற்றி திரைப்பயணத்தை நடத்தி வருகின்றனர். அப்படி அறிமுகமானவர் காமெடி நடிகர் யோகி பாபு.

ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வந்த இவர், சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் அமீர் நடிப்பில் வெளியான யோகி படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். மேலும் பாபு என்ற இவரது பெயர் அதன் காரணமாகவே யோகி பாபு என மாறியது.

அஜித் விஜய் என பல முன்னெணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடிக்கின்றார் நடிகர் யோகி பாபுஅவர் மற்ற ஹீரோ படங்களில் காமெடியாக நடிப்பது மட்டுமின்றி தனியாக படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

யோகி பாபுவுக்கு 2020ல் திருமணம் நடைபெற்று, தற்போது அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். மகனுக்கு விசாகன் என அவர்கள் பெயர் சூட்டி இருக்கின்றனர். பெயர் சூட்டு விழாவுக்கு பிரபலங்கள் பலரும் சென்று இருந்தார்கள்.

இந்நிலையில் இன்று யோகி பாபுவுக்கு பிறந்தநாள் என்பதால் அதை வீட்டில் கொண்டாடி இருக்கிறார். மேலும் அந்த பார்ட்டியில் நடிகை சஞ்சனா சிங்கலந்துகொண்டிருக்கிறார் .

அப்போது யோகி பாபுவின் மகனுடன் எடுத்த வீடியோவை சஞ்சனா வெளியிட்டு இருக்கிறார். முதல் முறையாக வெளியாகி இருக்கும் யோகி பாபுவின் மகன் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/ParthibanAPN/status/1550501720719241217?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1550501720719241217%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fyogi-babu-son-video-goes-viral-1658503469

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement