வங்கி வேலையை உதறிவிட்டு சினிமாவுக்குள் வந்தவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய மாநகரம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று யார் இந்த இயக்குநர் என்று பலரையும் கேட்க வைத்தது. அந்தப் படத்தின் டைட்டில் கார்டு முதல் திரைக்கதை வரை அனுபவம் வாய்ந்த இயக்குநரின் இயக்கம் போலவே இருந்ததாக ரசிகர்கள் கொண்டாடினர்.
அதற்கு அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கியிருந்தார்.ஒரு இரவில் நடக்கும் கதையாக வடிவமைக்கப்பட்டிருந்த இப்படம் வேற லெவலில் வெற்றி பெற்றதால் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தையும், திரைக்கதையையும் பார்த்து பலரும் மிரண்டு போனார்கள்.
முதல் இரண்டு படங்களும் இப்படி செம ஹிட்டாக கொடுத்த லோகேஷ் மூன்றாவது படத்தில் விஜய்யை வைத்து இயக்கினார். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டிருந்த அந்தப் படத்தில் இதுவரை யாரும் காணாத விஜய்யை ரசிகர்கள் பார்த்தனர். விஜய்யுடன் விஜய் சேதுபதியும் இணைய படம் அதிரிபுதிரி ஹிட்டானது.
இப்படி வரிசையாக ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் தனது திரைக்கதையில் லோகேஷ் கனகராஜ் உச்சம் தொட்டார்.தனது முந்தைய படமான கைதி படத்தின் கதாபாத்திரங்களை இதில் இணைத்து லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்கினார். இதனாலும், கமல் ஹாசனின் அசத்தலான நடிப்பாலும் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது
இனி லோகி இயக்கும் அத்தனை படங்களிலும் எல்சியூ இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் என நட்சத்திரப்பட்டாளமே நடித்து வருகின்றார்கள். இப்படியான ஒரு நிலையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது
அதாவது லோகேஷ் இயக்கிய கைதி மாஸ்டர் விக்ரம் ஆகிய திரைப்படங்களில் ஒரு லவ் ஸ்டோரி இருந்தது. ஆனால் லவ் பண்ணும் ஜோடியில் யாராவது ஒருவர் கொல்லப்படுவதை வழக்கமாகவும் வைத்திருந்தார்.இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் த்ரிஷாவும் ப்ரியா ஆனந்தும் நடித்து வருவதால் இவர்கள் இருவரில் யார் யாருக்கு ஜோடி ஆவார்கள்.யார் வில்லன்களால் கொல்லப்படப் போகின்றார்கள் என்பதனை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இது குறித்த வீடியோ ஒன்றும் டுவிட்டரில் வைரலாகி வருவதைக் காணலாம்.
@Dir_Lokesh Romantic Things 😹🔥🔥🔥🔥
Waiting For #Leo Anna 😂😁#BloodySweet #ValentinesDay #LCU pic.twitter.com/fxP5lxjkrp
Listen News!