உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படம் வெளியானது. இதையடுத்து மாமன்னன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாகவே அமைந்தது
உதயநிதியின் நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன். இப்படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மாமன்னன் திரைப்படம் உதயநிதியின் கடைசி படம் என்பதால் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். மேலும் உதயநிதி முதல் முறையாக மாரி செல்வராஜுடன் கூட்டணி அமைத்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியது.
குறிப்பாக வடிவேலுவின் கதாபாத்திரமும் நடிப்பும், படத்தின் கதைக்களமும் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. இந்நிலையில் மாமன்னன் படம் வெளியான முதல் நாளில் மட்டும் இப்படம் 10 கோடி வசூலித்தது. இதையடுத்து அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு முதல் நாள் வசூல் இல்லை என்றாலும் ஓரளவு நல்ல வசூலியே பெற்று வருகின்றது.
இதைத்தொடர்ந்து படம் வெளியான இரண்டே நாட்களில் உதயநிதி மாமன்னன் படத்திற்காக வெற்றி விழா நடத்தினார். இது அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. படம் வெளியான இரண்டே நாட்களில் ஏன் வெற்றி விழாவை படக்குழு கொண்டாடுகின்றனர். படம் உண்மையிலேயே வெற்றிபெற்றதா என்பது போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி மாமன்னன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ளதாம். எனவே மாமன்னன் வெற்றி படம் தான் என ரிப்போர்ட் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!