தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான படங்களில் செம ஹிட் படம் என்றால் அது லவ் டுடே தான்.
கல்பாத்தி நிறுவனம் தயாரிக்க பிரதீப் ரங்கநாதன் இயக்கியதோடு அதில் நடித்தும் இருந்தார்.
அத்தோடு இப்படத்தில் சத்யராஜ் மற்றும் ராதிகாவை விட புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் படத்தை பெரியளவில் கொண்டாடினார்கள், ரூ. 5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
எனினும் இப்போது பிரதீப் அடுத்த படம் யாரை வைத்து இயக்கப்போகிறார் என்ற பேச்சு தான் அதிகம் கிளம்பி உள்ளது.
லவ் டுடே பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் பிரதீப் அடுத்து விஜய்யுடன் இணைய இருப்பதாகவும் அப்படத்தை ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
மேலும் இப்படம் Sci-Fi கதைக்களம் என்றும் விஜய்யின் 68 அல்லது 69வது படமாக அமையும் என்கின்றனர்.
Listen News!