• Sep 20 2024

இப்படிப்பட்ட ரோலில் தான் விஜய் நடிக்கப்போகின்றாரா…வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் பீஸ்ட் படத்திற்கு பின்னர் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முறையாக நடிகை ராஷ்மிகா நடிகின்றார்.

அத்தோடு தமன் இப்படத்திற்கு இசையமைக்க சரத்குமார், ஷ்யாம், பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். எனினும் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகிவரும் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகுமென்று படக்குழுவால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

எனினும் இதைத்தொடர்ந்து இப்படத்தில் விஜய்யை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டப்போவதாகவும், இப்படத்தின் கதை சற்று வித்தியாசமாகவும் அதே சமயத்தில் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் பிடித்தபடி இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது தளபதி 66 படத்தில் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் பிகில் படத்தில் நடித்த ஹர்சிதா, பென்குயின் படத்தில் நடித்த அத்வைத் ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் இந்த தகவலை அடுத்து சிலர் சமூகத்தளங்களில் விஜய் இப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடிப்பதாக பேசி வருகின்றனர். அத்தோடு சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.

அதை கிட்டத்தட்ட உறுதிசெய்யும் வகையில் இப்படத்தில் ராஷ்மிகா மற்றும் மெஹரீன் என இரண்டு நாயகிகள் நடிப்பது உறுதியாகியுள்ளது. எனினும் இப்படத்தில் இரு கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு விஜய் அப்பாவாக நடிப்பதாக பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement