தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலிலும் அள்ளிக் குவித்தது.இதனை அடுத்து விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் பூஜை வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
இது ஒரு புறம் இருக்க அண்மையில் வெளியாகிய லியோ திரைப்படத்தினை ப்ரமோஷன் செய்வதற்காக இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக தான் லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்படுவதாகவும் படக்குழு விளக்கம் கொடுத்திருந்தது.
இதனால் விஜய்யின் குட்டி ஸ்டோரியை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது லியோ வெளியாகி 500 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், படம் எதிர்பார்த்தளவில் சக்சஸ் இல்லை என நெகட்டிவான விமர்சனங்களும் தொடர்ச்சியாக வந்தவண்ணம் உள்ளன.
இதனையடுத்து லியோ வெற்றி விழா பற்றி வலைப்பேச்சு பிஸ்மி போட்டுள்ள ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.அதில், "லியோ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிவிழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நவம்பர் 1ஆம் தேதி நடைபெறுகிறது. விஜய் கலந்துகொள்ளும் இந்த விழாவுக்கு காவல்துறையின் பாதுகாப்புக் கேட்டு லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்துள்ளார்" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் மேலே 'Scoop' என்றும் பதிவிட்டுள்ளார்.
அதேபோல், Leo Block Buster, Leo Disaster என்ற ஹேஷ்டேக் உடன் ஷேர் செய்துள்ளார். இதனால் வலைப்பேச்சு பிஸ்மி சொல்லும் தகவல் உண்மையா அல்லது படக்குழுவினரை கலாய்ப்பதற்காகவா என்பது தெரியவில்லை. விஜய் ரசிகர்களும் இதே குழப்பத்துடன் விவாதித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!