• Nov 10 2024

விஜய் டிவியிலா? அல்லது யூடியூப்பிலா? எதில் அதிக வருமானம் வருகின்றது- ரசிகையின் கேள்விக்கு ஓப்பனாக பதில் சொன்ன மணிமேகலை

stella / 1 year ago

Advertisement

Listen News!

காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே அதாவது தனது 17 வயதில் டிசம்பர் 2009 ஆம் ஆண்டு வீடியோ ஜாக்கியாக அறிமுகம் ஆனவர் தான் மணிமேகலை.1993 ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி திருப்பூரில் பிறந்தார் இவர் பிஎஸ்சி எம்பிஏ முடித்துள்ளார்.2011 முதல் இருந்து 2017 வரை மணிமேகலைக்கென்று சன் மியூசிக் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

 காலை மற்றும் மாலை இருவேளைகளும் மணிமேகலைக்கு தனி மற்றும் தொகுப்பாளராக சிறப்பாக அவரது பணியை செய்தார்.சுறுசுறுப்பு மற்றும் விடாமுயற்சியினாலும் சன் மியூசிக் இல் தனக்கென ஒரு பெயரை பதித்தார்.இதனையடுத்து நடனக் கலைஞர் உசைன் என்பவரைக் காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு வீட்டில் மறுப்புத் தெரிவித்ததால் ரிஜிஸ்டர் ஆபீஸ் இருவரும் தன் நண்பர்களுடன் திருமணம் செய்துகொண்டனர்.


இவர்களின் வாழ்க்கை தொடக்கத்தில் வீடு கூட வாடகைக்கு கிடைக்காமல் ரோட்டில்  இருவரும் ஒரு வீடு வாடகைக்கு இருந்து தங்கினார்.பின்னர் மிஸ்டர் அன்ட் மிஸ் இஸ் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் விஜய் டிவியில் அறிமுகமாகினார். தொடர்ந்து குக்வத் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலம் மிகவும் பிரபல்யமானார்.

கொரோனா லாக்டவுனில் நிறைய பேர் யூடியூப் சேனல் தொடங்கி காசு பார்த்து வருகிறார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் யூடியூப் சேனல் வரை வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தொகுப்பாளினிகள் மணிமேகலை, பிரியங்காவும் தனியாக சேனலை தொடங்கி சம்பாதித்து வருகின்றனர்.அதோடு இதில் அவர் நன்றாக சம்பாதித்து வருகிறார்.


இதன் மூலம் சொகுசு கார், பைக், HM லேண்ட் என்று ஒட்டுமொத்தமாக மணிமேகலையின் சொத்து மதிப்பு மட்டும் $1 Million – $5 Million வரை  என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 7.82 கோடி முதல் 35 கோடி வரையாகும். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மணிமேகளையிடம் விஜய் டிவியில் அதிக வருமானம் வருகிறதா இல்லை யூடியூபில் அதிக வருமானம் வருகிறதா என்று ரசிகை ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். இதற்கு மணிமேகலை யூடியூபில் தான் அதிக வருமானம் என்று படு ஓப்பனாக கூறி இருக்கிறார்.


Advertisement

Advertisement