தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்க எந்த மாதிரி கதாபாத்திரங்கள் வந்தாலும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் நடித்து கொடுத்து வருகிறார். இவர் தமிழையும் தாண்டி பாலிவுட்டிலும் சில படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் .
அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி “ஃபார்சி” எனும் வெப் சீரிஸ்சில் நடித்து முடித்துள்ளார். இந்த வெப் தொடர் பிரபல ஓடிடி தலமான அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வெப் விஜய் சேதுபதியுடன் சீரிஸில் ஷாஹித் கபூர், ராஷி கன்னா உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில், இந்த வெப்சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதி எவ்வளவு கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இதில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி 7 கோடி வரை சம்பளம் வங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிள்ளது.
ஒரு வெப்சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதி 7 கோடி சம்பளம் வாங்கியுள்ளது கோலிவுட் சினிமாவியே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஏனென்றால், ஒரு படத்தில் நடிக்கவே அவர் 15 கோடி தான் சம்பளம் வாங்குவார். ஆனால், சமீபகாலமாக வெப்சீரிஸில் நடிப்பதற்கு அவர் இத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய் சேதுபதி தற்போது ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Listen News!