விஜய் நடித்து ரிலீஸ் ஆக இருக்கும் லியோ படத்தின் ஹைப்பை விட தற்போது அவருடைய அரசியல் பார்வை தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. கல்வி விருது வழங்கும் விழா, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் என அடுத்தடுத்து பரபரப்பு கிளம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில், இன்று காமராஜர் பிறந்த நாளை ஒட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர பயிலகம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
விஜய் முழு நேர அரசியலுக்கு வரப்போகிறார், படம் நடிப்பதிலிருந்து ஓய்வு பெற போகிறார் என்று ஒரு பக்கம் செய்தியும், பாராளுமன்ற தேர்தலில் நேரடியாக களம் இறங்குகிறார், சட்டமன்றத் தேர்தலில் தான் களம் இறங்குவார் என அவரை சுற்றி முழுக்க முழுக்க தற்போது அரசியல் பேச்சை தவிர வேறு எதுவுமே இல்லை என்று சொல்லலாம்.
இந்த நேரத்தில் பிரபல யூட்யூபர் ஒருவர், விஜயின் அரசியல் பார்வை எப்படி இருக்கும், அவர் எதற்காக இப்பொழுது அரசியலில் ஆழம் பார்க்கிறார் என அவருடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார். அதாவது விஜய் தற்போது சினிமாவில் இருக்கும் வரை அவருக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஆதரவு ரொம்பவே அதிகம் தேவைப்படுகிறது. அதனால் விஜய் கண்டிப்பாக நேரடியாக திமுக அரசை எதிர்க்க மாட்டார்.
அதே நேரத்தில் விஜய் எதிர்க்கப்போவது எதிர்க்கட்சியான அதிமுக கட்சியும் கிடையாது என்றும் சொல்லியிருக்கிறார். நடிகர் விஜயின் அரசியல் என்பது உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து தான் இருக்கும் என ரொம்பவும் ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார். எப்பொழுது உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சியின் மொத்த அதிகாரத்தையும் தன் கையில் எடுக்கிறாரோ, அந்த நேரம் விஜய் அரசியல் களம் காணுவார் என்பது போல் இவர் சொல்லுகிறார்.
அதற்காகத்தான் விஜய்யின் அரசியல் திட்டங்கள் அனைத்தும் மாணவர்களை குறி வைத்தே நடக்கிறது என்றும், உதயநிதி நேரிடையாக அரசியலில் களம் காணும் பொழுது, அவரைவிட தளபதி விஜய்க்கு அதிக ஆதரவு இருக்கும், இதுதான் அவருடைய திட்டம் என்றும் சொல்லி இருக்கிறார். நடிகர் விஜய்க்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் குருவி பட சமயத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அதன்பின்னர் நாங்கள் இருவரும் பேசி சமாதானம் ஆகிவிட்டோம், எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று உதயநிதி சமீபத்தில் சொல்லியிருந்தார். ஆனால் விஜயின் வாரிசு பட ரிலீசின் போது, உதயநிதி நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தை வாங்கி வாரிசுக்கு அந்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்காத வகையில் பல வேலைகளை செய்தது இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை உறுதிப்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.
Listen News!