• Nov 17 2024

விஜயின் 'லியோ' படம் ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி சாதனையா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயின் 'வாரிசு'படம் கடந்த தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் ,வெற்றியையும் பெற்றிருந்தது.இதனைத்தொடர்ந்து , தற்போது நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் உடன் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு 'தளபதி 67' என்று பெயர் வைக்கப்பட்டு படத்தின் பூஜை தொடங்கப்பட்டது. மாஸ்டர் வெற்றிக்கு பிறகு மீண்டும் இணையும் கூட்டணி என்பதால் கோலிவுட்டில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் அளவுக்கு அமைந்துள்ளது இந்த கூட்டணி. 'லியோ' என்று நேற்று ப்ரோமோ வீடியோவுடன் அசத்தலான தகவல்களை  வெளியிட்டனர்.

லியோ படத்தின் படத்தின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கவுதம் வாசுதேவ் மேனன்,மிஸ்கின் என நட்சத்திர பட்டாளமே லியோ படத்தில் நடிக்கவுள்ளனர் . இதனை செவன் ஸ்க்ரீன் சார்பாக லலித் குமார், ஜெகதீஸ் பழனிசாமி தயாரிக்க, அனிருத் இசையமைப்பில் உருவாகி வருகிறது. 

மனோஜ் பரமஹம்சா லியோ படத்தை ஒளிப்பதிவு செய்ய, ஆர்ட் டைரக்டராக சதீஸ் குமாரும் பணிபுரிகிறார்கள். இந்த வருட ஆயுத பூஜை அன்று லியோ படம் வெளியாகும் என்று படத்தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகும் லியோ படம், பான் இந்தியா படமாக வெளியிடப்பட உள்ளது. அதுவும் எல்.சி.யூ கான்செப்ட்டாக லியோ நிச்சயம் இருக்கும் என்பதால் ரசிகர்களிடம் இப்போதே ஆர்வம் எழுந்துள்ளது.

கைதி, விக்ரம் ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியான எல்.சி.யூ கான்செப்ட்டில் வருவதால் திரையுலகினர் மத்தியிலும் , ரசிகர்கள் மத்தியிலும்  ,அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் மொத்த பட்ஜெட் 250 கோடி என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் லியோ படத்தை பற்றிய தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை மட்டுமல்ல, ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது. லியோ படம் பிரீ தியேட்டர் பிசினசில் பெரிய சாதனை படைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

அதன்படி, லியோ படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் 150 கோடிக்கும், சாட்டிலைட் ரைட்ஸ் 80 கோடிக்கும், மியூசிக் ரைட்ஸ் 16 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தமாக சேர்த்து பார்க்கும் போது, படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 246 கோடி விற்பனையாகி உள்ளதால், லியோ படக்குழு மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே இப்படியொரு வசூல் சாதனையை கோலிவுட்டில் லியோ படம் தான் பெற்றுள்ளது என்று சொல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement