• Nov 14 2024

'உங்களின் திருமணம் ஜூன் 9-ஆம் தேதி தானா ?'-நயன்தாராவிடம் நக்கல் கேள்வி கேட்ட கீர்த்தி சுரேஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் நானும் ரௌடி தான் திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய போது காதல் வயப்பட்னர்.

இதனால் கடந்த 10 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். இருவருக்கும் கடந்த ஆண்டு தான் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது என்பதை அறிவித்திருந்தனர்.

இதனால் இருவரும் விரைவில் திருமணம் செய்தகொள்ளவுள்ளனர் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்திருந்தனர் , அதன்படி இவர்களின் திருமணம் வரும் ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியிடம் "உங்களின் திருமணம் ஜூன் 9-ஆம் தேதி தானா ?" என விளையாட்டாக கேட்டுள்ளார். அத்தோடு இவர்களின் திருமணத்திற்கு திரையுலக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement