விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.
ஈஸ்வரி கோபியிடம் உடம்பு எப்படி இருக்கு என்று விசாரிக்கின்றார். அத்தோடு ராதிகா இங்க தான் இருப்பாளா வீட்டுக்கு போகமாட்டாளா என்று கேட்க கோபி உடம்பு சரியானதும் அவளை கூட்டிட்டு போயிடுறேன் என்கின்றார் அப்போது அங்கு வரும் பாக்கியா பெரிய கோயில் ஒன்றில் தனக்கு கல்யாண ஆடர் வந்திருப்பதாக ஈஸ்வரியிடம் சொல்கின்றார்.
தொடர்ந்து பேசிய ஈஸ்வரி செழியன் இன்னும் ஆபிஸிலிருந்து வரவில்லை என்று சொன்னதும் பாக்கியா செழியனுக்கு போன் பண்ணுகின்றார். ஆனால் செழியனை போனை எடுப்பதாக இல்லை. இதனால் பாக்கியா எழிலைக் கூட்டிக் கொண்டு செழினின் ஆபிஸிற்குப் போய் செழியன் பற்றி விசாரிக்க செழியன் ஆபிஸிற்கு வரவில்லை என்கின்றனர்.
பின்னர் ஆபிஸில் வேலை செய்யும் ஒருவரை அழைத்து செழியன் பற்றி விசாரிக்க செழியன் அந்த ப்ரோஜக்ட் வேலையை ஒரு மாதத்திற்கு முதலே செய்து முடித்து விட்டான் அதெல்லாம் பண்ணிட்டு தான் லீவு சொல்லிட்டு நிற்கின்றான் என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். அப்போது எழில் செழியன் தப்பு பண்ண வாய்ப்பில்லை நீ கவலைப்படாத என்று ஆறுதல்ப்படுத்துகின்றார்.
தொடர்ந்து கோயிலில் ஆடர் எடுப்பதற்காக பாக்கியா நிற்க அங்கு மாலினியும் நிற்பதோடு மாலினி செழியனுக்கு போன் பண்ணி நீங்க இப்போ வரல என்றால் நான் பாக்கியா ஆன்ட்ரி கிட்ட போய் எல்லா உண்மைகளையும் சொல்லிடுவேன் என்று மிரட்டுகின்றார். இதனால் செழியன் அங்கே வந்து மாலினியை சமாதானம் செய்து அனுப்பி வைத்து விடுகின்றார்.
இதைப் பார்த்த பாக்கியா செழியனிடம் என்ன நடக்குது என்று மிரட்ட விசாரிக்க,செழியன் மாலினி தன்னை மிரட்டுவதாகவும் தன்னுடயே இருக்கச் சொல்லி சைக்கோ மாதிரி பண்ணிட்டு இருக்கிறா எனக்கு என்ன பண்ணுறது என்றே தெரிலம்மா என அழுது சொல்ல பாக்கியா ஆறுதல்ப்படுத்துகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.
Listen News!