எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வந்தவர் தான் நடிகர் மாரிமுத்து.அதில் அவரது எதார்த்தமான நடிப்பும், பேச்சும் அனைவரையும் கவர்ந்தது. அதன் காரணமாக அவர் சினிமாவில் அடைந்த பிரபலத்தைவிட சீரியல் மூலம் அதிகம் பிரபலமடைந்தார். சமூக வலைதளங்களிலும் ஏகத்துக்கும் அவரை கொண்டாடினார்.
இந்தச் சூழலில் இன்று அவர் உயிரிழந்தார். காலையில் வளசரவாகத்தில் இருக்கும் டப்பிங் ஸ்டூடியோவில் சீரியலுக்கான டப்பிங்கை கொடுத்தபோது உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. உடனே தன்னுடைய காரை தானே ஓட்டிக்கொண்டு சூர்யா மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இதனால் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருவதோடு நேரில் சென்று தமது அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.
இப்படியான நிலையில் எதிர் நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் கனிகா இது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் வழமை போல தான் ஷுட்டிங் போய்ட்டு வாறேன் என்று வீட்ல சொல்லிட்டு ஷுட்டிங் போய் இருந்தேன். அங்கு போய் மேக்கப் போட்டிட்டு இருக்கும் போது மாரிமுத்து சேர் டப்பிங் ஷுட்டிங்ல கொஞ்சம் உடம்பு சரி இல்லாமல் இருந்ததால் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ட்டாங்க என்று சொன்னாங்க.
அதுக்கப்பிறம் சூர்யா ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போன போது அவங்க இறந்திட்டாங்க என்று தகவல் சொன்னாங்க. இது எங்களால் நம்பவே முடியல, ஷாக்கிங்காத் தான் இருக்கு. அதிலிருந்து நாங்க இன்னும் மீண்டு வரல அவங்க குடும்பத்தை பார்க்க முடில, எப்பிடி ஆறதல் சொல்லுறது என்றே தெரில.
சேர் சீரியலில் பார்க்கிற மாதிரி எல்லாம் நிஜத்தில் கிடையாது. நிஜத்தில் ரொம்ப தங்கமான மனுஷன்.அவருடைய நிறைய ஹாட் வேர்க் பண்ணிட்டாரு. அவரை தெரியாதவங்களே இல்லை என்று சொல்லுற அளவுக்கு வளர்ந்திட்டாரு.இந்த டைம்ல அவருக்கு இப்பிடி ஆச்சு என்று நினைக்கும் போது ஜீரணிக்கவே முடியல. அவர் எங்களை விட்டிட்டு போய்ட்டாரு என்ற கோபம் தான் இருக்கு. அவருடைய ஆத்மா சாந்தி அடையனும். அவரை இந்த ஈஸ்வரி ரொம்பவே மிஸ் பண்ணுவேன் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!