விஜய்டிவியில் விறுவிறுப்பாகவும் வித்தியாசமான கோணத்திலும் ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் தான் பாக்கியலட்சுமி. இத்தனை காலமாக தனது கணவனே கண்கண்ட தெய்வம் என வாழ்ந்து வந்த பாக்யா தற்பொழுது கணவனுக்கு எதிராக திரும்பியுள்ளார்.அவர் தனக்கெதிராக செய்த குற்றங்களை அறிந்த பாக்யா தற்பொழுது துணிச்சலுடன் போராடி வருகின்றார்.
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…
கோர்ட்டுக்கு போன பாக்கியா இன்னும் விவாகரத்தில் உறுதியாக இருக்கிறாரா அல்லது உணர்ச்சிவசத்தில் எடுத்த முடிவு என எழில் சோதிக்கின்றார்.இதன் பின் பாக்யா விவாகரத்து வாங்குவதில் உறுதியாக இருக்கிறார்.
மேலும் இந்த பக்கம் ராதிகா வீட்டுக்கு போன ஈஸ்வரி ராதிகாவை பார்த்து பாக்கியா உன் மீது மதிப்பும் மரியாதையும் பாசமும் வைத்திருந்ததை பற்றி பேசி அவளுக்கு எப்படி நான் துரோகம் செய்ய முடிந்தது என கேட்கின்றார்.
என் குடும்பமே சின்னா பின்னமா போய் நிக்குது இதுக்கு நீ தான் காரணம். உன்னை எல்லோரும் எங்க வீட்டில் ஒருத்தியா தான் பார்த்தோம் ஆனா நீ எங்க எல்லோருக்கும் இப்படி ஒரு துரோகத்தை பண்ணிட்டு சந்தோஷமா வாழ்ந்திட முடியுமா? நீ நல்லாவே இருக்க மாட்டாய். வயிரெரிந்து சொல்றேன் எங்கட கண்ணீரும் வேதனையும் உன்ன சும்மா விடாது என திட்டுகிறார்.
ராதிகாவை திட்டியதால் அவருடைய அம்மா குறிப்பிட அவரையும் நீ எல்லாம் ஒரு அம்மாவா என கடுஞ்சொல்லால் திட்டுகின்றார்.. இதன் பிறகு ராதிகா எவ்வளவு பேச முயற்சி செய்தும் பேச விடாத ஈஸ்வரி சாபத்திற்கு மேல் சாபம் விட்டு மயூவையும் திட்டுகிறார்.
இதன் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த ஈஸ்வரி நீ நல்லாவே இருக்க மாட்ட நாசமா போயிடுவே உன் பொண்ணும் நீயும் சந்தோஷமா வாழவே முடியாது. இரண்டு பேரும் வாழ்க்கை முழுக்க கண்ணீரோடு தான் இருப்பீங்க என மண்ணை வாரி தூவி சாபம் விடுகிறார்.
இதனால் ராதிகா அதிர்ச்சி அடைந்து அப்படியே நிற்கிறார்.இதன் பிறகு ராதிகாவை உள்ளே அழைத்துச் சென்ற அவருடைய அம்மா அந்த குடும்பத்துக்கு நல்லது பார்த்தா உனக்கு என்ன தியாகி பட்டமா கொடுத்தாங்க? பேசாம அந்த கோபியை கல்யாணம் பண்ணிக்க என கூறுகிறார். ராதிகாவும் ஈஸ்வரி பேசிய பேச்சாள் அதிரடி முடிவை எடுக்கப் போகிறார் என்பது போலவே இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் பாக்கியா மற்றும் கோபி என இருவருக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிடுகிறது.
பிற செய்திகள்
- நடிகை ஹன்சிகாவிற்கு விரைவில் திருமணம்-யார் மாப்பிள்ளை தெரியுமா..?
- தனுஷ் ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் செய்தி… அடுத்தடுத்து மூன்று படம்?
- ஷங்கரின் மகள் அதிதியை தாக்கி பேசிய நடிகை ஆத்மிகா- பொங்கி எழும் ரசிகர்கள்..வைரலாகும் ட்வீட்..!
- வசூல் வேட்டையில் தி லெஜண்ட் திரைப்படம்-உலகம் முழுவதும் இத்தனை கோடியா..?
- பிக்பாஸ் சீசன் 6 எப்போது ஆரம்பமாகிறது..? சர்ச்சை பிரபலங்களின் பட்டியல் ரெடி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!