பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது எப்போதும் போலவே ஆரம்பம் ஆன நாள் முதல் இன்றுவரை பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் சண்டை சச்சரவுகளுடன் நகர்ந்து சென்ற வண்ணம் இருக்கின்றது.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோவில் ஜனனிக்கும் adk க்கும் இடையில் வாய்க்கலப்பு ஏற்பட்டது. அதாவது இந்த வீட்டில் நல்லவர் என்று முகமூடி அணிந்து இருக்கும் நபர் யார் என ஒரு டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகின்றது. அதற்கு ஜனனி, ADK யை கூறிவிடுகிறார். இதற்கு உடனே adk ஜனனியுடன் வாதிடுகின்றார்.
இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் தனலட்சுமிக்கும் அசீமிற்கும் இடையில் தகராறு ஏற்படுகின்றது. அதாவது இயந்திரத்திலிருந்து வெளியே வரும் பாக்ஸ் ஐ எடுப்பதற்காக அசீமை மேலே படுக்க வைக்கின்றனர். ஆனால் அப்போதும் அசீம் அதனை எடுக்கவில்லை.
இதனால் கோபமடைந்த தனலட்சுமி "இங்க படுக்கிறது முக்கியமில்லை அசீம்" எனத் திட்டுகின்றார். இதனைத் தொடர்ந்து குயின்ஷி தனலட்சுமிக்கு அருகில் சென்று "அவனுக்கு எடுக்கக் கூடாது என்று தோன்றி இருக்கலாம்" எனக் கூறுகின்றார்.
அதுமட்டுமல்லாது அமுதவாணனிடம் சென்று "முதலை வாய்க்குள்ள கை விட்ட மாதிரி ஆகிடிச்சு" எனக் கூறுகின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ ஆனது சண்டைகளும், புரளிகளும் நிறைந்ததாக வெளிவந்து இருக்கின்றது.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..!
Listen News!