• Sep 20 2024

பிரபல கிரிக்கெட் வீரருடன் டேட்டிங்கில் இருக்கும் வாரிசு நடிகை... அட இவங்களா அது... இணையத்தில் கசிந்த வீடியோ...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் பிரபலமான பெண் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சாரா அலி கான். இவர் ஒரு வாரிசு நடிகையும் கூட. அதாவது இவர் நடிகர் சைஃப் அலி கான் என்பவரின் மகள் ஆவார். மேலும் சாரா அலி கான் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'கேதர்நாத்' திரைப்படத்தின் மூலமாகவே கதாநாயகியாக அறிமுகமானாவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அதுமட்டுமல்லாது தற்போது பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையாக கொடி கட்டிப் பறந்து வருகின்ற சாரா அலி கான் தொடர்ந்தும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் டென் நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கிறார்.


மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான 'அத்ராகி ரே' என்ற திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக சாரா அலி கான் தான் நடித்து அசத்தி இருந்தார்.


இந்நிலையில் சாரா அலி கான் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரரான சுப்மன் கில் என்பவருடன் ஹோட்டலில் உணவருந்தும் போது எடுத்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. இதனால் தற்போது சாரா அலி கானும் சுப்மன் கில்லும் டேட்டிங்கில் இருப்பதாக இணையதள வாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் இதற்கு முன்பு சாரா அலி கான் ஹிந்தி நடிகரான கார்த்திக் ஆர்யனை காதலித்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமல்லாது அவர்கள் இருவரும் கடந்த 2020-ஆம் ஆண்டு பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் சுப்மன் கில் சாரா அலி கானை காதலிக்கின்றார் என்ற விடயம் உண்மையாக இருக்கலாம் எனவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. 

Advertisement

Advertisement