• Nov 14 2024

அது உங்களுக்கு செட் ஆகவில்லை; ஐஸ்வர்யா ராஜேஷிற்கு அட்வைஸ் பண்ணிய ரசிகர்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஆரம்பத்தில் குரூப் டான்ஸராக சினிமாவில் நுழைந்து, அதனைத் தொடர்ந்து மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் சினிமாவில் நடிப்பதற்கு அழகையும், நிறத்தையும் விட திறமையே அவசியமானது என்பதை நிரூபித்துக் காட்டிய ஒருவர்.

இவரின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக 'காக்கா முட்டை' என்ற திரைப்படம் அமைந்திருந்தது. இப்படத்தில் இவர் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடித்து இருக்கின்றார். இப்படத்தினைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பினை இவர் பெற்றிருந்தார். தனது நடிப்புத் திறமையினால் தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றார்.

இவர் படங்களில் சிறப்புத் தோற்றங்களில் மட்டும் வந்து செல்லும் ஒருவராக மட்டும் இல்லாது தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே அதிகளவில் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அது கதாநாயகியாக மட்டும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அது முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தால் கட்டாயம் நடிப்பேன் எனவும் கூறி வருகின்றார். இக்காரணத்தினாலோ தெரியவில்லை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு பல பட வாய்ப்புக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் எனப் பல முன்னணி நடிகர்களிற்கு ஜோடியாக நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் மட்டுமல்லாது சோஷியல் மீடியாக்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது தன் புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் ரசிகர்களுடன் உரையாடியும் வருகின்றார். இந்தநிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திலும் ரசிகர்களுடன் உரையாடல் ஒன்றினை நடாத்தி இருந்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் ரசிகர்களினால் கேட்கப்பட்டது. அதற்கெல்லாம் பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷிற்கு அவரின் ரசிகர்களில் சிலர் அவரின் மீது அக்கறைகொண்டு அவருக்கு அட்வைஸ் செய்திருந்தனர். அதாவது ரசிகர் ஒருவர் "நீங்கள் கவர்ச்சியாக நடிக்காதீர்கள், அது உங்களுக்கு செட் ஆகவில்லை. எனவே ப்ளீஸ் கிளாமர் ரோலில் நடிக்க வேண்டாம்' என ஐஸ்வர்யா ராஜேஷிற்கு கூறியுள்ளார். அதற்கு சரி என ஐஸ்வர்யா ராஜேஷ் பதிலளித்து இருந்தார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவ்வாறு கூறியதைக் கேட்டதும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமல்லாது அவர் ரசிகர்களுக்கு கூறிய இந்த பதில் தற்போது இணையத்தில் செம வைரலாகியும் வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement