• Nov 19 2024

இந்த ஒரு பயத்தில்தான் கமலுடன் இணையவில்லை.. மனம் திறந்த ஏ ஆர் முருகதாஸ்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது ஏ ஆர் முருகதாஸ் பிஸியாக மாறி இருக்கிறார். தர்பார் திரைப்படத்திற்கு பிறகு எந்த படங்களையும் இயக்காமல் இருந்து வந்த இவர் சமீபத்தில் வெளியான ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தை தயாரித்திருந்தார். இப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக அவர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இதன் மூலம் தன்னுடைய இடத்தை மீண்டும் நிரப்பவும் அவர் ஆயத்தமாகி கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் கமலுடன் இதுவரை இணையாததற்கான காரணத்தை ஒளிவு மறைவு இல்லாமல் தெரிவித்து இருக்கிறார்.

அதாவது சகலகலா வல்லவனாக இருக்கும் கமல் சாரை வைத்து படம் பண்ணுவது என்பது மிகப்பெரிய விஷயம். அவரை வைத்து படம் இயக்கிய டாப் 20 டைரக்டர்களின் சிறந்த படம் எது என்று கேட்டால் அது உலக நாயகனின் படமாக மட்டும் தான் இருக்க முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவரை இயக்குவது என்பது சவாலான விஷயம் தான்.

அதிலும் சிறுவயதிலிருந்தே அவரின் ரசிகனாக இருந்து வளர்ந்த எனக்கு அவரை படம் இயக்குவது பெரிய கிக்காக இருக்கிறது.எனினும்  அது மட்டுமல்லாமல் அவரை டைரக்ட் செய்யும்போது எந்த ஒரு இடத்திலும் எனக்குள் இருக்கும் ரசிகன் வெளியே வந்து விடக்கூடாது. அப்படி இருந்தால் அது ப்ரொபஷனலாக இருக்காது. அதனாலேயே அவருடன் இணைவதற்கு எனக்கு ஒரு பயம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதை நான் நல்லபடியாக செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு விதத்தில் முருகதாஸ் கூறியது உண்மைதான். ஏனென்றால் பாரதிராஜாவின் 16 வயதினிலே, மணிரத்தினத்தின் நாயகன், லோகேஷின் விக்ரம், கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் அந்த இயக்குனர்களுக்கு இந்த படங்கள் யாவும் பெயர் சொல்லும் படமாகவும் உள்ளது. அதுதான் உலக நாயகனின் சிறப்பு அம்சம். அந்த வகையில் ஏஆர் முருகதாஸ் அவருடன் இணைவதற்கு பயப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இருப்பினும் இவர்களின் கூட்டணி இணைந்தால் நன்றாக இருக்கும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

Advertisement

Advertisement