• Sep 21 2024

அஜித்தோடு இணைந்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகின்றதே அது உண்மையா?- அதர்வா பட இயக்குநர் கூறிய சுவாரஸியமான விடயம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

அண்மையில் வெளியாகிய 8 தோட்டாக்கள் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் இயக்குநர் ஸ்ரீகணேஷ் . இவரது இயக்கத்தில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் குருதி ஆட்டம்.

இப்படத்தில் கதாநாயகனாக அதர்வா நடித்துள்ளதோடு கதாநாயகியாக ப்ரியா பாவானி சங்கர் நடித்துள்ளார். ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.இந்த படம் சில ஆண்டுகளுக்கே முன்பே முடிந்துவிட்டாலும் பல பிரச்சனைகளில் சிக்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரிலீஸாகிறது.

அந்த வகையில் இப்படத்தின் இயக்குநரான ஸ்ரீ கணேஷ் அண்மையில் டுவிட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சில உருக்கமான விடயங்கள் குறித்தும் கூறியுள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது “நீங்கள் அஜித்தோடு இணைந்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிறதே… அது உண்மையா?” எனக் கேட்க, அதற்குப் பதிலளித்த ஸ்ரீகணேஷ் “நன்றி… அதை பற்றி இப்போது எதுவும் பேச முடியாது. சீக்கிரமே படம் பற்றிய அப்டேட் சொல்கிறேன்” எனக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement