• Sep 20 2024

துருவ் உடன் இணைந்து நடித்திருந்தும் மகான் தியேட்டரில் வெளியாகாதது இன்னும் கவலை தான்- உருக்கமாகப் பேசிய விக்ரம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் விக்ரம் இவர் தற்பொழுது கோப்ரா என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திலிருந்து அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதைத் தொடர்ந்து நடிகர்கள் விக்ரம், இர்பான் பதான், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி இயக்குநர் அஜய் ஞானமுத்து உள்ளிட்ட பட குழுவினர் ரசிகர்களுடன் Twitter Space தளத்தில் கலந்துரையாடினர். அதில் பேசிய நடிகர் விக்ரம், கோப்ரா திரைப்படத்தில் தோற்றங்களை விட எமோஷனல் டிராமா அதிகம் இருக்கும் என தெரிவித்தார். மேலும் மகான், கோப்ரா பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் ஒரே தோற்றத்தில் நடித்தேன். அதன் காரணமாக ஒவ்வொரு திரைப்படத்திலும் நடிப்பை வித்தியாசப்படுத்துவதில் சவால் இருந்தது.


குறிப்பாக கோப்ரா திரைப்படத்தில் பல கெட்டப் இருக்கின்றன. அதை ஒவ்வொன்றையும் வெவ்வேறு விதமாக செய்வது இன்னும் சவாலாக இருந்தது என தெரிவித்தார். தற்போது அந்த திரைப்படங்களை பார்க்கும் பொழுது மகிழ்ச்சி அளிப்பதாகவும் விக்ரம் பெருமிதமடைந்தார். 

 இருந்தபோதிலும் மகான் திரைப்படம் திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டும். துருவ் விக்ரமுடம் நான் இணைந்து நடித்த அந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகாதது இன்னும் வருத்தம் அளிக்கிறது எனவும் கூறினார்.

Advertisement

Advertisement