• Nov 11 2024

ரஜினியையே ஒதுக்கி வைத்த பிரபல நடிகை... அதுவும் 22 வருடங்களாக... குழம்பிப் போயுள்ள ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பிலும், ஸ்டைலிலும் மயங்காதவர்களே இல்லை என்று கூறலாம். இவரை ஒரு தடவையேனும் பார்க்க முடியாதா என ஏங்கித் தவிக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். 


சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் இவருடன் இணைந்து ஒரு சிறிய கதாபாத்திரத்திலேனும் நடிக்க வேண்டும் என பல நடிகர், நடிகைகள் ஆசையோடு காத்திருப்பார்கள். ஆனால் ஒரு நடிகை மட்டும் இதுவரை அவருடன் ஜோடியாக இணைந்து நடிக்க வாய்ப்பிருந்தும் நடிக்காமல் போய்விட்டார்.

அவர் வேறு யாருமில்லை. முன்னணி நடிகர்களான கமல், அஜித், விஜய், தனுஷ், சிம்பு உள்ளிட்டவர்களின் படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த நடிகை சினேகா தான்.


இன்றுவரை தமிழ் சினிமாவின் புன்னகையரசி என அழைக்கப்பட்டு வரும் இவர் பிரசன்னாவை திருமணம் செய்த பின் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதை தவிர்த்து வருகின்றார்.இருப்பினும் சினேகா 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


இத்தனை ஆண்டுகளில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து பட்டையை கிளப்பியுள்ள சினேகா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மட்டும் ஜோடியாக நடிக்காமல் போய்விட்டார்.

எனினும் இயக்குநர் சுந்தர் சி-க்கு கூட ஜோடியாக நடித்தவர் ஏன் ரஜினிக்கு மட்டும் ஜோடியாக நடிப்பதை தவிர்த்தார் என்பது தெரியவில்லை. இருப்பினும் 'கோச்சடையான்' படத்தில் நடிப்பதாக கூட செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் பின்பு அது வதந்தி என்று கூறப்பட்டது. 


இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால் மீனா, குஷ்பூ உள்ளிட்ட நடிகைகளை கூட தற்போது வரை தனது படங்களில் நடிக்க சிபாரிசு செய்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.

இப்படி இருக்கையில் இருவரும் 22 ஆண்டுகளாகியும் ஜோடி சேர்ந்து நடிக்காமல் இருந்து வருகின்றமை ரசிகர்கள் பலருக்கும் குழப்பத்தை உண்டு பண்ணி இருக்கின்றது. 

Advertisement

Advertisement