சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர் நீச்சல்' தொடரானது எப்போதுமே முன்னிலை வகிக்கும் ஒரு சீரியலாக இருந்து வருகின்றது. பெண் அடிமைத்தனத்தைக் கதைக்களமாக கொண்ட இந்த சீரியலிற்கு மக்கள் எப்போதுமே சிறந்த வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் இந்த சீரியலில் உள்ள அத்தகைய ஒரு அருமையான கதாபாத்திரம் தான் குணசேகரன். இந்தக் கதாபாத்திரத்தில் இதுவரை காலமும் நடிகர் மாரிமுத்து நடித்து வந்திருந்தார். எதிர்பாராத விதமாக இவர் மாரடைப்பினால் இறந்தமையைத் தொடர்ந்து இந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது.
இருப்பினும் நடிகர் மாரிமுத்து இருந்தப்போ அவரின் வீட்டிற்கு வேல ராமமூர்த்தி போகவில்லை. இதற்கான காரணத்தை அவரே மாரிமுத்துவின் மகன் அகிலனுக்கு கால் பண்ணி தெரிவித்துள்ளார். அதாவது "சூட்டிங் இருந்ததால் என்னால் வர முடியல, நானும் அவரும் தான் 6நாள் ஒண்ணாக நடிச்சோம், 2நாளுக்கு முன்னாடி அண்ணன் தம்பியாக நடிச்சிட்டு இப்போ இவர் இறந்ததால் என்னால் அந்தத் துயரத்தைத் தாங்க முடியவில்லை,
காமெராவிற்கு முன்னாடி நான் உட்கார்ந்து இருக்கும் போது மாரிமுத்து இறந்து விட்டதாக செய்தி வந்தது, இதனையடுத்து எனக்கு வார்த்தையே வரல, இப்பவும் எனக்கு அவர் நினைப்பாகவே இருக்கு, அந்த நேரம் என்னால் உங்க வீட்டிற்கு வர முடிலப்பா, ஆறுதலாக ஒருநாள் உங்க வீட்டிற்கு வருகிறேன்" எனவும் கூறியுள்ளார் நடிகர் வேல ராமமூர்த்தி.
Listen News!