• Nov 19 2024

'இந்த Travel முடிவது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு..'பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்பில் மீனா உருக்கம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிவுக்கு வந்துவிட்டது. இது தொடர்பில் மீனா பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்ப முறை என்பது பலருக்கும் எட்டாத கனியாக இருக்கிறது. இதன் காரணமாகவே குறித்த தொடருக்கு ரசிகர்கள் ஏராளம்.

கடந்த 5 வருடங்களாக விஜய் டிவியில் TRPயில் மிகவும் நல்ல இடத்தை பிடித்து முன்னிலையில் இருந்த தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் காணப்பட்டது.


அத்துடன், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்த ஒவ்வொருவரும் ரசிகர்களிடம் பிரபலமாக காணப்பட்டதோடு அவர்களை தமது குடும்பத்தில் ஒருவராக ரசிகர்களும் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வீடியோ மூலம் பதிவொன்றை பகிந்துள்ளார். அதன்படி குறித்த பதிவில்,  'பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் நிறைய சப்போர்ட் நிறைய லவ் இப்போ வரை கிடைச்சுட்டு இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆனா இந்த  Travel முடிவது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது' என வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement