• Sep 20 2024

'இப்படியான நபர்களுடன் டேட்டிங் செய்வது மிகவும் கடினம்'- மனம் திறந்த நடிகை ப்ரியா பவானி சங்கர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல சின்னத்திரை ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகை தான் ப்ரியா பவானி ஷங்கர். இவர் விஜய்டிவியில் பல சில சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து மேயாத மான் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பின் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அத்தோடு அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாவில் பதில் சொல்லி வருகிறார் . சமீபத்தில் அவரிடம் உள்ளாடை சைஸ் என்ன என ஆபாச கேள்வி கேட்ட ஒரு நபருக்கு பதிலடி கொடுத்திருந்ததும் இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் டேட்டிங் செல்வது பற்றி ஒரு விஷயத்தை அவர் பகிர்ந்து இருக்கிறார். அதிகம் மெச்சூர் ஆக இருக்கும் நபர்களுடன் டேட்டிங் செல்வது கடினம் என கூறி இருக்கிறார் அவர்.

எதாவது சண்டை வந்தால் உடனே அவர் மன்னிப்பு கேட்டு விடுவார், அந்த கோபத்தை வைத்துக்கொண்டு அதற்கு பின் நான் என்ன செய்ய முடியும் எனவும் கேட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement