• Nov 19 2024

இவரை இப்படிப் பார்ப்பது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது... கண்ணீருடன் விஜயகாந்தின் மனைவி கூறிய அந்த விடயம்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகர் விஜய்காந்த். இவர் 'கேப்டன்' என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றார். இவரின் கட்டான உடலமைப்பிற்கும், கம்பீரமான தோற்றத்திற்கும் என்றே ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இவருக்கு உண்டு. 


இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் பல படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. நடிப்பில் மட்டுமல்லாது அரசியலிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வந்த விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது ஓய்வு எடுத்து வரும் விஜயகாந்த் முற்றாக குணமடைந்ததும் மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அந்தவகையில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மழை பிடிக்காத மனிதன்' என்ற படத்தில் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வருகிறார் என்றும் ஒரு தகவல் வெளியானது.

இது தொடர்பாக அப்படத்தின் இயக்குநர் கூறுகையில் "நடிகர் விஜயகாந்த் இப்படத்தில் நடிப்பார் அல்லது அவருடைய குரலாவது படத்தில் இடம்பெறும்" எனத் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் விஜயகாந்த்தின் மனைவி கூறிய விடயம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனது கணவரை கூடவே இருந்து ரொம்பப் பத்திரமாக கவனித்து வரும் பிரேமலதா கூறுகையில் "அவருக்கு தொடர்ந்து தேவையான சிகிச்சைகள் யாவும் கொடுக்கப்பட்டுத் தான் வருகிறது" என்றார். 

மேலும் "எவ்வளவு தான் சிகிச்சைகள் செய்தாலும் அவருக்கு நடப்பதிலும் பேசுவதிலும் குறைபாடு உள்ளது. எப்போதுமே சுறுசுறுப்பாக ஓடித் திரிந்த மனிதனை இப்படி ஒரே இடத்தில் பார்ப்பது ரொம்பவே வேதனையாக உள்ளது" எனவும் கண்ணீருடன் பேசியிருக்கிறார் மனைவி பிரேமலதா.


Advertisement

Advertisement