• Sep 20 2024

பூஜையுடன் தொடங்கியது சந்திரமுகி-2- ராதிகா, வடிவேலு எல்லாம் நடிக்கிறாங்களா

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2005ல் வெளியாகி பிளாக் பாஸ்டர் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி.இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார்.

மனநல பிறழ்வால் பாதிக்கப்பட்ட தன்னுடைய நண்பனின் மனைவியை அதிலிருந்து மிகவும் புத்திசாலித்தனமாக அவர் காப்பாற்றுவதாக கதைக்களம் காணப்பட்டது. இந்தப் படம் வெளியாகி 18 ஆண்டுகளை கடந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

லைக்கா தயாரிக்கவுள்ள இப்படத்தில் ரஜினிக்கு பதில் லாரன்ஸ் இணைந்துள்ளார். அவருக்கு த்ரிஷா அல்லது லஷ்மி மேனன் ஜோடியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் மைசூருவில் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. இதில் பி. வாசு, ராகவா லாரன்ஸ், வடிவேலு மற்றும் ராதிகா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங், தற்போது தொடர்ந்து மைசூருவில் நடைபெறவுள்ளது. படத்திற்கு பாகுபலி, ஆர்ஆர்ஆர் படப்புகழ் கீரவாணி இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement