தமிழ் சினிமாவில் இயக்குனர். கே பாலச்சந்திரனின் உதவியாளராக அறிமுகமாகி, விசாரணை திரைப்படத்தினுடாக தேசிய விருதையும் பெற்ற பிரபல தமிழ் நடிகர் மற்றும் இயக்குனர் தான் சமுத்திரக்கனி.
இவர் தமிழ் சினிமாவுக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியது ஆகும். இவரது இயக்கத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற படங்களாக அப்பா, சாட்டை , அடுத்த சாட்டை போன்ற படங்களை குறிப்பிடலாம்.
இந்த நிலையில், அண்மையில் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சமுத்திரக்கனி, ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ போன்ற படங்களால் தான் நான் படம் இயக்குவதையே விட்டுவிட்டேன் என கூறியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,
தற்போதைய காலங்களில் சினிமாவும் அரசியலாக மாறி வருகின்றது. பணத்திற்காக தான் சினிமா பயன்படுத்த படுகின்றது. பெரிய பெரிய ஸ்டார் படங்களையும், பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களை மாத்திரமே தியேட்டர் உரிமையாளர்கள் வெளியிட விரும்புகிறார்கள்.
இதனால் தான் பல அறிய படைப்புகள் அழிந்து போகிறது. அப்பா படைத்தை ரிலீஸ் செய்த பின்பு கூட பல ஆபிஸ் வாசல்களில் காவல் கிடந்தேன். எங்கள் படத்தின் சாட்லைட் ரைன்ஸ் ஐ வாங்குங்கள் என்று. ஆனால் யாரும் வாங்க முன்வரவில்லை. இப்படியான காரணங்களால் தான் நான் படம் இயக்குவதையே தவிர்த்துவிட்டேன்.
மலையாள, தெலுங்கு படங்கள் ஹிட் அடிக்கின்றன. தியேட்டர் ஓனர்கள் பெரிய படங்களோடு சிறிய சிறிய படைப்புகளையும் வெளியிட வேண்டும். இவ்வாறு தனது ஆதங்கங்களை தெரிவித்த சமுத்திரக்கனி, இதுபோன்ற காரணங்களால் தான் நான் டிரெக்ஷன் செய்வதில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!