தமிழ் சினிமாவில் இதயம் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறியப்பட்டவர் தான் கதிர். இபடபடம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் என்று பல படங்களை இயக்கினார்.
இவர் இயக்கிய அனைத்து படங்களும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கும். இவரது படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வந்தனர். 90களில் சூப்பர் ஹிட் படங்கள் ஒன்றாக அமைந்த காதலர் தினம் என்னும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் குணால்.
இப்படத்தில் சோனாலி பிந்ரே போன்ற பலரும் நடித்திருந்தனர்.இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு குணால் பார்வை ஒன்றே போதுமே, புன்னகை தேசம், வருஷமெல்லாம் வசந்தம்,போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தார்.
கடைசியாக இவர் நண்பனின் காதலி என்ற படத்தில் நடித்திருந்தார். 2கே கிட்ஸ்சின் ஃபேவெரெட் நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் குணால், 2008 ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனை ஆண்டுகள் கழித்து, காதலர் தினம் படத்தின் இயக்குநரான கதிர் நடிகர் குணாலுக்கு அந்த படத்தின் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை பற்றி கூறியுள்ளார். அதாவது "காதலர் தினம் படத்திற்காக ஒரு புதுமுக நடிகரை தேடிக்கொண்டிருக்கும் பொழுது, ரோட்டில் குணால் நடந்து செல்வதை நான் பார்த்தேன், அவரது ஹேர் ஸ்டைல் மஷ்ரூம் கட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்பொழுது அந்த மஷ்ரூம் மிகவும் பிரபலமானது.
ஆனால் பார்ப்பது மிகவும் டிமாண்ட். அந்த ஹேர் ஸ்டைலில் அவரைப் பார்த்தவுடன் இந்த கதைக்கு அவர் சரியாக இருப்பார் என்று எனக்கு தோன்றியது. உடனே என் அசிஸ்டன்ட்டை கூப்பிட்டு அவரை அழைத்து வரும்படி சொன்னேன். அப்படி நடிக்க வந்தவர் தான் நடிகர் குணால் . காதலர் தினம் படத்தில் அவரது ஹேர் ஸ்டைலும் அவரது முக ஜாடையும் கச்சிதமாக பொருந்தியது. அதன் பிறகு அவரை படத்தில் நடிக்க நாங்கள் ஒப்பந்தம் செய்தோம் என்று கூறியுள்ளார். இந்த படம் வெளிவந்த சமயத்தில் அவர்கள் ஹேர் ஸ்டைலுக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- 103 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் நடிகர் விஜய்யின் பாட்டி- முக்கிய கோரிக்கையை வைத்த ரசிகர்கள்
- எங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாகப் போவதற்கு இது தான் காரணம்- குடும்ப ரகசியத்தைக் கூறிய சினேகா
- கமல் தனது ரோலக்ஸ் மணிக்கூட்டை இந்தப் படத்தில் அணிந்திருந்தாரா?- அட இது தெரியாமல் போச்சே
- நடுரோட்டில் ரசிகன் செய்த செயலால் வியந்து போய் நின்ற பிரபு தேவா- இது போல பரிசு எதுவும் கிடையாது
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!