தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் 2003 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பாய்ஸ்'. அந்தக் காலத்தில் இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பும், நல்ல விமர்சனங்களும் கிடைத்திருந்தன.
இப்படத்தின் உடைய கதை இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அதாவது இப்படத்தில் குறிப்பிட்ட காட்சியில் இளைஞர்கள் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வருவார்கள். அந்த பெண் ரோலில் சீரியல் நடிகையான புவனேஸ்வரி என்பவர் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இந்தப் படம் குறித்து ஒரு சில தகவல்களைப் பகிர்ந்திருக்கின்றார் புவனேஸ்வரி. அதாவது இந்தப் படத்தில் பாலியல் தொழில் செய்யும் காட்சியில் நடித்தது குறித்து விளக்கம் அளிக்கையில் "சீரியலில் நடித்து வந்த எனக்கு ஷங்கர் சாரின் பாய்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் இது போன்ற காட்சியில் நடிக்க கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அதனால் இப்படத்தில் நடிக்க ஆரம்பத்தில் மறுத்துவிட்டேன்.
அதற்கு உடனே ஷங்கர் சார் 'இந்த காட்சியில் நடிக்கும் போது ஐந்து இளைஞர்களின் கைவிரல் கூட உங்கள் மேல் படாது' என்று உறுதியளித்தார். அதன் பின்னர் நானும் பாய்ஸ் படத்தில் அந்த காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்" எனக் கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாது "இப்படத்திற்குப் பிறகு தான் எனக்கு தெலுங்கு சினிமாவில் அதிகளவான பட வாய்ப்புகள் வந்து குவிந்தன" எனவும் அப்பேட்டியில் புவனேஸ்வரி தெரிவித்திருந்தார்
Listen News!