• Nov 17 2024

ஷிவானியின் சினிமா கேரியரில் பாதிப்பை ஏற்படுத்தியது பிக்பாஸ் காதலா..? அவரே கூறிய மழுப்பலான பதில்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷிவானி. இதனையடுத்து ஒரு சில பட வாய்ப்புக்கள் இவருக்கு கிடைத்தன. அந்தவகையில் சமீபத்தில் வெளியான விக்ரம், நாய் சேகர் போன்ற படங்களில் இவர் நடித்திருந்தார். 


அதுமட்டுமல்லாது விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராகவும் நடித்திருந்தார். இருப்பினும் இவருக்கு தனிப்பட்ட முறையில், துப்பாக்கி சுடும்படியான காட்சிகளும் அமைந்த நிலையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். அதேபோன்று தான் நாய் சேகர் படத்திலும் ஸ்விம்மிங் சூட்டிங் நடித்து அதிரடியாக அசத்தியுள்ளார். மேலும் பம்பர் படத்தில் ஹீரோயினாகவும் நடித்திருக்கின்றார்.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் தனக்கு கிடைத்த சினிமா வாய்ப்புகள் குறித்து பேசியுள்ளார் ஷிவானி. அதாவது சின்னத்திரையில் தனக்கு எளிதாக சீரியல் வாய்ப்புகள் கிடைத்துவிட்டதாகவும் ஆனால் சினிமாவில் அவ்வளவு எளிதாக தன்னை நிரூபிக்கும் சந்தர்ப்பம் தனக்கு கிடைக்கவில்லை என்றும் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார் ஷிவானி.


அதுமட்டுமல்லாது சினிமாவில் தனக்கு எந்தவிதமான பேக்கிரவுண்டும் இல்லாததும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் ஷிவானி அப்பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் பிக்பாஸ் (பாலாஜி காதல்) காதலை குறிப்பிடும் வகையில், காதல்தான் சினிமா கேரியரில் பாதிப்பை ஏற்படுத்தியதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஆமாம் என்று பதிலளித்த ஷிவானி, சினிமா மீதான காதல்தான் தன்னுடைய கேரியரை தொடக்கி வைத்ததாக மழுப்பலாக கூறியுள்ளார். ஷிவானி மற்றும் பாலாஜி இருவரும் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் அது ஃபேக் லவ் என்று விமர்சிக்கப்பட்டது.


Advertisement

Advertisement