தமிழ் சினிமாவில் நடிகராகவும் பாடகராகவும் வலம் வருபவர் பிரேம்ஜி . இவரது இயற்பெயர் பிரேம்.கங்கை அமரனை குறிக்கும் 'ஜி' என்ற ஆங்கில எழுத்தை சேர்த்து பிரேம்ஜி என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
வெளிநாட்டில் இசை படித்துவிட்டு இந்தியா திரும்பிய பிரேம்ஜி தனது சகோதரர் யுவன் சங்கர் ராஜா இசையில் மட்டுமின்றி இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், தேவி ஶ்ரீ பிரசாத், மணி ஷர்மா இசையிலும் பாடி வந்தார்.
திருப்பாச்சி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த "கண்ணும் கண்ணும்தான்" பாடலில் வரும் இங்கிலீஷ் ராப் பகுதியை இவர்தான் பாடியிருப்பார். மேலும் இதுவரை 16 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டியில் மன்மதன் படத்தின் பின்னணி இசைப்பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, பிரேம்ஜியை கவனித்த சிம்பு,"அடுத்து நான் வல்லவன் என்கிற படத்தை இயக்க போகிறேன். அதில் நீ நயன்தாராவின் நண்பனாக நடிக்க வேண்டும்" என்று கூறி தனது முதல் வாய்ப்பை தந்தது சிம்புதான் என்று கூறியுள்ளார்.
முதன் முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வசனங்களையும், நடிப்பையும் சொல்லிக் கொடுத்தது சிம்புதான். அதனால்தான் அவருடைய மேனரிஸத்தை என்னுடைய மற்ற படங்களிலும் பார்க்க முடிகிறது என பிரேம்ஜி கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- கடுமையான வேர்க்கவுட் செய்து அசத்தும் ஐஸ்வர்யா தனுஷ்-இன்ஸ்டாவில் வைரலாகும் வீடியோ
- தற்கொலைக்கு முயலும் சிவகாமி; கடைசியில் சந்தியாவால் காத்திருந்த அதிர்ச்சி
- திருமணமாகாமல் தனிமையில் தவிக்கும் நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..?
- விவாகரத்து நடிகையுடன் நெருக்கம் காட்டும் விக்கி- சண்டையை கிளப்பிய நயன்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!