தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகர்களுள் ஒருவராக காணப்படுபவர் தான் நடிகர் சேசு. இவரது காமெடி, நடிப்புக்கு தனி இடமே உண்டு.
தமில் சினிமாவில் மட்டுமின்றி, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சியிலும் கலக்கி இருந்தார் சேசு.
அதாவது, லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் விதவிதமான தோற்றங்களில் வந்து வித்தியாசமான காமெடிகளை செய்து அனைவரையும் சிரிக்க வைத்து இருந்தார்.
எனினும், அண்மையில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட, தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் எதிர்பாரா விதமாக நேற்றைய தினம் உயிரிழந்தார். இவரது மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், நடிகர் சேசுவின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட லொள்ளு சபா பழனி, செய்தியாளர்களை சந்தித்து அண்ணனிடம் இருந்து எப்படி தானம் செய்வதென்பதை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி பேசியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,
சேசு அண்ணா குடிப்பழக்கத்தை நிறுத்தி 15 வருடங்கள் ஆகிறது. ஆனாலும் சந்தானத்துடன் அவர் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் குடிகார பூசாரியாகவே நடித்து இருப்பார். குடியை நிறுத்தினாலும் புகை பிடிப்பதை அண்ணா விடவே இல்லை. மது குடிக்கும் பலர் நல்லாத்தான் வாழ்கிறார்கள். ஆனால் புகை பிடிப்பதால் தான் நுரையீரல் பாதிப்படைந்து விரைவிலேயே உயிரிழக்கும் நிலை உருவாகிறது.
சேசு அண்ணாவிடம் காசு இல்லை என்றாலும் மற்றவருக்கு உதவும் மனப்பான்மை என்ன என்பது பற்றி அவரிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவரிடமிருந்து புகை பிடிப்பது எப்படி என்பதை தயவு செய்து யாரும் கற்றுக் கொள்ள வேண்டாம் என சேசு அண்ணாவுக்கு எப்படி மாரடைப்பு ஏற்பட்டது என்பதை பற்றி கூறியுள்ளார் பழனி.
மேலும் சேசு அண்ணாவுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கு. வீடு கட்டினாலும் வீடு கடனில் தான் இருக்கிறது. ஆனாலும் ஏழை மக்கள் 10 பேருக்கு மேல் இலவச திருமணம் நடத்தி வைத்துள்ளார். தர்மம் தலைகாக்கும் என்று சொல்வதெல்லாம் சும்மா. அப்படி இருந்தால் தர்மம் செய்த விவேக் சார், மயில்சாமி சார் எல்லாம் இவ்வளவு சீக்கிரமா போய் இருப்பாங்களா? அடுத்தவங்களுக்கு உதவி செய்ய வேண்டும். அந்த அளவுக்கு நம்முடைய உடலையும் பாதுகாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் பழனி.
Listen News!