ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா 3 திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து வை ராஜா வை என்னும் திரைப்படத்தினை இயக்கி இருக்கின்றார். இந்த நிலையில் இவர் தனது காதல் கணவனான தனுஷை தற்பொழுது விவாகரத்து செய்துள்ளார்.
விவாகரத்தின் பின்னர் மிகவும்ஆக்டீவாக தனது பணிகளில் ஈடுபட்டு வருவதோடு சோஷியல் மீடியாவிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். இதனால் தன்னை பற்றிய போட்டோக்கள், வீடியோக்களை அதிகம் பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் அண்மையில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை,சந்தித்துள்ளார்.அந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை பகிர்ந்து ,உங்களை சந்தித்து, உங்களுடன் காஃபி அருந்தியது மகிழ்ச்சியாக உள்ளது போனி கபூர் அங்கிள். பழைய காலங்கள், பப்பி அக்கா பற்றிய நினைவுகள், வேலைகள் பற்றி உங்களுடன் ஆலோசித்தது அற்புதமாக உள்ளது என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
இது சாதாரண சந்திப்பு தான் என்றாலும், ஐஸ்வர்யா இயக்க போகும் புதிய படத்தை போனி கபூர் தயாரிக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் ஊகித்து வருகின்றனர். இது பற்றி விரைவில் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கின்றனர்.
பிற செய்திகள்
- விஷால் எப்படி இருக்கிறார்- தூங்கி கொண்டிருந்தவரை தட்டி எழுப்பிய விஜய்-ஷாக்கான நடிகை சுனைனா
- தொட்டிலில் கிடத்தி வைத்திருக்கும் குழந்தை நடிகர் விஜய்யா?- இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படங்கள்
- பிக்பாஸ் சீசன் 6 தொடங்கும் திகதியும் அறிவிச்சாச்சு- அடுத்தடுத்து சர்ப்ரைஸ்களை கொடுத்து வரும் விஜய்டிவி
- நயன்தாராப் பற்றி செல்வராகவன் சொல்லும் போதே நம்பாத தனுஷ்- அட இவர் சொன்னதும் சரி தான்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!