முத்துக்குமரன் ஆன்கர் ஆக தொகுத்து வழங்கும் கலாட்டா நேர்காணலில் கலந்துகொண்ட ஜீ தமிழின் தொகுப்பாளினி அர்ச்சனாவும் , அவரது மகள் சாராவும் பல சுவாரசியமான விடயங்களை பகிர்ந்து கொண்டனர்.
இவர்கள் இருவருமே ஜீ தமிழில் தொகுப்பாளராக இருக்கின்றனர். தாய் மகள் தொகுப்பாளராக இருப்பதில் பெருமைப்படுவதாக தெரிவித்துக்கொண்டனர், அதுமட்டுமல்லாது தாயை மிஞ்சி சாரா தனது திறமைகளை வெளிப்படுத்தி வருவதால் தமக்குள் ஒரு போட்டி காணப்படுவதாகவும் அர்ச்சனா தெரிவித்தார்.
எத்தகைய சோதனைகள் வந்தாலும் தனது தாய் சிரித்த முகத்துடனே எப்போதும் காணப்படுவார் என்று மகள் சாரா கூறினார். மேலும் சத்திர சிகிச்சைக்குப் பிறகு தானொரு தாயாக மட்டுமே இருக்க ஆசை பட்டதாகவும் இருப்பினும் தனது மகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உத்வேகம் அளித்ததாக தெரிவித்துள்ளார் .
அத்துடன் செப்டம்பர் 10 இல் இருந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்ததாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது இந்த நிகழ்வில் தனது தாயை பெருமைப்படுத்தியதோடு தனது தாய் தனக்கு பிடித்த வேலையை செய்ய துணை நின்றதால் அவரை சூப்பர் மாம் அன்று அளித்ததோடு தாயின் பாதையைத் தான் பின்பற்றி தனது மகளுக்கு தானொரு சூப்பர் அம்மாவாக இருப்பதையும் அதுமட்டுமல்லாது தனது மகள் சாரா அனைத்து விதத்திலும் குழந்தை பெறாமல், திருமணமாகாமல் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்வதால் அவளும் ஒரு சூப்பர் மாம் என்று அர்ச்சனா குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது மகள் சாரா, மீடியாவில் தனக்கு வேலை செய்யும் எண்ணம் இருந்ததில்லை என்றும் இருப்பினும் தனது தாயின் ஆசிர்வாதத்துடன் தான் இந்த மீடியா துறையில் நுழைந்ததாக சாரா பெருமைப்பட்டுக் கொண்டார். அதுமட்டுமல்லாது இருபத்தி மூன்று வருடங்களாக தொழில் துறையில் இருக்கும் அர்ச்சனாவுக்கு வயதாகி விட்டதா ?என்று சுவாரசியத்துடன் சாரா வினவுவது போன்ற கேள்வியை கேலிக்கையாக எழுப்பினார்.
அதுமட்டுமல்லாது இப்படி ஒரு தாய் கிடைப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சாரா தெரிவித்தார். எப்பவுமே சாராவுக்கு அரேஞ்ச் மேரேஜ் செய்து வைக்க விரும்புவதாகவும் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
மேலும் அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து, அது ஒரு ரியாலிட்டி ஷோ தவிர ஒருவருடைய நடத்தையை சீர்திருத்தம் செய்வதற்குரிய இடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார், 40 வயதில் எல்லாம் எனது கேரக்டரை மாற்ற முடியாது எனவே கமென்ட் பண்ண வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் இந்த நேர்காணலில் அன்ங்கருடன் சுவாரசியமான தகவல்களை அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் பகிர்ந்து கொண்டதை காணலாம்.
Listen News!